HBDSuriya: ஆசை பட வாய்ப்பு தொடங்கி, அகரம் வரை - சரவணன் சூர்யாவானது இப்படித்தான்!

சினிமா
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jul 23, 2019 | 10:56 IST

நடிகர் சூர்யா இன்று தனது 44வத் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரை.

Suriya birthday special story
Suriya birthday special story  |  Photo Credit: Twitter

ஒரு பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் தனது சொந்த முயற்சியின் மூலமாக மட்டுமே பெரிய ஆளாக முடியும் என்பதற்கு சூர்யா சிறந்த உதாரணம். ரசிகர்களுக்கு நல்ல நடிகர், ஜோதிகாவுக்கு நல்ல கணவன், சிவக்குமாருக்கு நல்ல மகன் என்பதைத் தாண்டி மாணவர்களின் நலனுக்காகப் போராடும் ஒரு நல்ல மனிதர் என்று சூர்யாவைக் கூறலாம். இன்று அவருக்கு 44வது பிறந்தநாள்!

சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தனது அப்பா மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் சரவணனுக்கு ஏதோ நடிப்பு மீது ஈடுபாடு இல்லை. லயோலாவில் பி.காம் முடித்துவிட்டு கார்மெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அங்குகூட தான் சிவக்குமாரின் மகன் என்று கூறியதில்லை. 1995ஆம் வருடம் இயக்குநர் வசந்த் சிவக்குமாரை அணுகி சரவணனை ஆசைப் படத்தில் நடிக்கவைக்க கேட்டிருக்கிறார். ஆனால் சரவணனோ நடிப்பதில் ஆர்வம் இல்லை என மறுத்துவிட்டார். பின் அதில் அஜித் நடித்து மெகா ஹிட் ஆனது தனிக்கதை.

சரவணன் சினிமாவை வேண்டாமென்று கூறினாலும் சினிமா அவரை விடவில்லை. 1997ஆம் வருடம் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் சரவணனை நடிக்கவைக்க வேண்டும் என்று கேட்டு அந்தப் படத்துக்கு அவரிடம் சம்மதமும் வாங்கிவிட்டார். அதுதான் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர்.  ஏற்கனவே சரவணன் என்ற பெயரில் நடிகர் இருந்ததால் யாரு நம்ம பிக்பாஸ் சரவணன் தான்... மணிரத்னம் அவருக்கு தளபதி படத்தில் ரஜினியின் பெயரான சூர்யாவை வைத்தார். சரவணன் சூர்யாவானது இப்படிதான்!  

தொடக்கத்தில் சூர்யாவுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை, நடிக்கத் தெரியவில்லை என்று பல விமர்சனங்கள் வந்தன. ரகுவரன் அவருக்கு நீ யாரையும் பின்பற்றாமல் உனக்கென்று தனியாக ஒரு முத்திரையை உருவாக்கு என்று கூறினாராம். நேருக்கு நேர் படத்துக்குப் பிறகு ஃப்ரண்ட்ஸ், பூவெல்லாம் கேட்டுப்பார், பெரியண்ணா போன்ற படங்கள் ஹிட் ஆனாலும் எல்லாம் டபுள் ஹீரோ சப்ஜட்க், சூர்யாவுக்கு ஒரு தனித்துவத்தைத் தரவில்லை. முதலில் அவருக்கு ப்ரேக் கொடுத்தது  2001-இல் வெளியான பாலாவின் நந்தா. விக்ரமுக்கு சேது போல சூர்யாவுக்கு நந்தா கைகொடுத்தது. அதன்பிறகு வந்த மௌனம் பேசியதேவும் ஹிட். கௌதம் மேனனின் காக்க காக்கவில் ஒரு கம்ப்ளீட் ஹீரோவானார் சூர்யா!

அதன்பிறகு புரிந்தது சூர்யாவுக்கு தனது தனித்துவம் என்னவென்று. ஒவ்வொரு கதையையும் மிகமிக வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்தார். பிதாமகனில் பார்த்த சக்திதான் பேரழகன் சின்னா என்றால் உங்களால் நம்ப முடியாது. ஆயுத எழுத்து, கஜினி, சில்லுன்னு ஒரு காதல், வாரணம் ஆயிரம் என ஒவ்வொன்றும் ஒரு ரகம். இந்தக் கதை தேர்வுதான் சூர்யாவை ஒரு மாபெரும் நடிகன் எனப் பெயர் வாங்கவைத்தது. சில்லுன்னு ஒரு காதல் வந்த வாரத்தில்தான் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்துகொண்டார்கள். எனக்கு கிடைச்ச கணவன் அப்டி, அதனால்தான் நான் இன்றும் இப்படி சந்தோஷமா இருக்கேன் என்று சமீபத்தில் ஜோதிகா கூறியதுபோதும் சூர்யாவின் பர்சனல் வாழ்கையைப் பற்றிக் கூற...

நடிப்புத் தாண்டி தான் சமூகத்து ஏதேனும் ஒன்று செய்யவேண்டும் என்று 2006-இல் ஆரம்பித்ததுதான் அகரம். முதலில் சூர்யா அகரம் தொடங்கியது ஆரம்பக் கல்விமுதல் இயற்கைப் பேரிடர் வரை மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவவேண்டும் என்று. தற்போது அது தமிழ்நாட்டில் வசதி இல்லாத ஒரு நல்ல மாணவன் கூட கல்வி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது எனும் நோக்கத்தோடு இருக்கும் ஒரு ஃபவுண்டேஷனாக வளர்ந்து நிக்கிறது. நமக்கு தெரிந்த ஏதோரு ஒரு மாணவன் நன்றாகப் படிக்கிறார், வசதி இல்லை என்றால் அகரம் ஃபவுண்டேஷன் போங்க என்று கூறும் அளவுக்கு மாணவர்களுக்காக ஒரு பெரிய வாய்ப்பை, வாசலைத் திறந்து வைத்திருக்கிறார் சூர்யா. தற்போது உருவாகவிருக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பற்றி சூர்யா பேசியபிறகே மற்ற நடிகர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சூர்யா கூறியதால் பெற்றோர்களும் இந்தக் கல்விக் கொள்கை குறித்து விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

இதுபோன்று பல நல்ல விஷயங்களும் நல்ல படங்களும் தொடந்து செய்ய வாழ்த்துக்கள் சூர்யா! 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...