பார்த்திபன் "ஆஸ்கார்" வெல்ல வேண்டும்: ரஜினி வாழ்த்து - வீடியோ

சினிமா
Updated May 19, 2019 | 22:40 IST | Zoom

பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

super star Rajinikanth
super star Rajinikanth  |  Photo Credit: Twitter

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் "ஒத்த செருப்பு" . இதில் சாந்தனு, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அவர் திடீரென்று படங்கள் இயக்குவதை விட்டு விட்டு நடிக்க வந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டேன்.

சமீபத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அதைப்பற்றி அவரிடமே கேட்டேன். அப்போதுதான் அவர் ஒத்த செருப்பு படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். இந்தப் படத்தில் தனி ஒருவர் படம் முழுக்க இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. 1960-ல் சுனில் தத் ஒரு படத்தை தானே தயாரித்து இயக்கியிருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்தப் படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் 2-வதாக, தென்னிந்தியாவில் முதலாவதாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

 

 

 

இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தது மட்டுமின்றி அவரே தயாரித்து கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டுமானால் படத்தின் கரு இதுவரை சொல்லாத கதையாக சிந்திக்கக்கூடியதாக இருக்க வேண்டும், எதார்த்தமான கதை கொண்டிருக்க வேண்டும். படத்தை நல்லா விளம்பரப்படுத்த வேண்டும்.  இவை அனைத்தும் இருந்தால் படம் வெற்றி அடையும். இந்த அனைத்தும் ஒத்த செருப்பு படத்தில் இருக்கிறது.

படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனது நண்பர் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி எப்படி வெற்றியடைந்து மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல் படமும் வெற்றியடைந்து ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று பார்த்திபனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
பார்த்திபன் "ஆஸ்கார்" வெல்ல வேண்டும்: ரஜினி வாழ்த்து - வீடியோ Description: பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles