அண்ணா, தலைவா! மும்பையில் ரஜினியைக் கொண்டாடும் ரசிகர்கள் - வைரல் வீடியோ

சினிமா
Updated Apr 23, 2019 | 15:36 IST | டைம்ஸ் நவ் தமிழ்

முதலில் காரில் ஏறிச் சென்றுவிடலாம் என்று காருக்கு அருகில் சென்ற சூப்பர்ஸ்டார், அவர்கள் வாஞ்சையுடன் அழைத்ததும் ஒரு நிமிடம் நின்று அனைவருக்கும் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துவிட்டு பின் காரில் ஏறிச்செல்கிறார்.

rajini shooting spot in darbar
தர்பார் ரஜினிகாந்த்   |  Photo Credit: Instagram

மும்பையில் தர்பார் ஷூட்டிஙில் இருக்கும் சூப்பர்ஸ்டாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸான சூப்பர் ஸ்டாரின் பேட்ட சென்ற வாரம்தான் 100-வது நாள் வெற்றியைக் கொண்டாடியது. அதன் பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் தர்பார் என பெயர் வைக்கப்பட்டு மும்பையில் சென்ற வாரம் முதல் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏ.ஆ.முருகதாஸ் இயக்குகிறார்.

படத்தின் நாயகி யாரென்று படக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில் தற்போது நயன்தாரா சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸும் ட்வீட் செய்திருந்தார்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Being humble #rajnikant

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

தர்பாரில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இந்தப்படத்துக்கு  பேட்ட படத்தில் மரணமாஸ் காட்டிய அனிருத் இசையமைக்கிறார். லைக்கா தயாரிக்கும் இந்தப்படத்துக்கு தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படமும் வரும் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#rajinikanth snapped at on location for is upcoming movie

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

 

தற்போது தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. அங்கே படப்பிடிப்பில் இருக்கும் ரஜினியை ரசிகர்கள் அன்போடு அண்ணாவென்றும் தலைவா என்றும் அழைக்கிறார்கள். முதலில் காரில் ஏறிச் சென்றுவிடலாம் என்று காருக்கு அருகில் சென்ற சூப்பர்ஸ்டார், அவர்கள் வாஞ்சையுடன் அழைத்ததும் ஒரு நிமிடம் நின்று அனைவருக்கும் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துவிட்டு பின் காரில் ஏறிச்செல்கிறார். அத்துடன் அவர் படத்தில்வரும் கெட்-அப் வேடத்திலும் பல புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

NEXT STORY
அண்ணா, தலைவா! மும்பையில் ரஜினியைக் கொண்டாடும் ரசிகர்கள் - வைரல் வீடியோ Description: முதலில் காரில் ஏறிச் சென்றுவிடலாம் என்று காருக்கு அருகில் சென்ற சூப்பர்ஸ்டார், அவர்கள் வாஞ்சையுடன் அழைத்ததும் ஒரு நிமிடம் நின்று அனைவருக்கும் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துவிட்டு பின் காரில் ஏறிச்செல்கிறார்.
Loading...
Loading...
Loading...