'2.0' படத்தின் சம்பள பாக்கி; லைக்கா நிறுவனம் மீது சப்-டைட்டிலிஸ்ட் குற்றசாட்டு!

சினிமா
Updated Aug 12, 2019 | 19:07 IST | Zoom

'2.0' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தனக்கும் தன் குழுவிற்கும் சம்பளத்தை வழங்காததாக சப்-டைட்டிலிஸ்ட் ரெக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Subtitlist Rekhs
சப்டைட்டிலிஸ்ட் ரெக்ஸ்   |  Photo Credit: Twitter

'2.0' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தனக்கும் தன் குழுவிற்கும் படத்திற்கான சம்பளத்தை இன்னும் வழங்காததாக சப்-டைட்டிலிஸ்ட் ரெக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

2018-ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்ச்செலவில் உருவாகி வெளியான திரைப்படம் '2.0'. ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்தில் அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை முன்னணி நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இந்தியாவிலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் பிரமாண்ட வெற்றி அடைந்ததை படக்குழுவினரே அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில் இப்படத்தில் சப்டைட்டில் செய்த ரெக்ஸ் தனக்கும் தன் குழுவினருக்கும் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் '2.0' படத்திற்காக தான் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்த போதும் தனக்கும் தன் குழுவுக்கும் இன்னும் சம்பளம் வரவில்லை என்றும், தனது போன் கால்களையும் மெயில்களையும் லைக்கா நிறுவனம் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

இது மட்டும் இன்றி 2010-ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'எந்திரன்' படத்திற்கான சம்பளமும் இன்னும் வரவில்லை என்றும், அதற்காக இயக்குனர் ஷங்கர் தன்னிடம் மன்னிப்பு கேட்டு 'நண்பன்' படத்திற்கான தொகையை முன்கூட்டியே வாங்கித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

'2.0' படக்குழுவினர் லைக்கா நிறுவனம் மீது குற்றம் சாட்டுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னமே படத்தின் உதவி இயக்குனரும், விளமபரதாரர்களும் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது சப்-டைட்டிலிஸ்ட் ரெக்ஸும் தனக்கு சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.              
 

NEXT STORY
'2.0' படத்தின் சம்பள பாக்கி; லைக்கா நிறுவனம் மீது சப்-டைட்டிலிஸ்ட் குற்றசாட்டு! Description: '2.0' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தனக்கும் தன் குழுவிற்கும் சம்பளத்தை வழங்காததாக சப்-டைட்டிலிஸ்ட் ரெக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola