உறவுக்காரப் பெண்ணுடன் திருமணமா? - சிம்பு விளக்கம்

சினிமா
Updated May 26, 2019 | 10:26 IST | Zoom

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் என்று வெளியான செய்திகளுக்கு தற்போது திருமணம் செய்துகொள்ளம் திட்டம் இல்லை என சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

str clarifies about his marriage rumours
str clarifies about his marriage rumours  |  Photo Credit: Twitter

விஷால், ஆர்யா என எலிஜிபிள் பேச்சுலர்கள் அனைவரும் கமிட் ஆனதும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றுதான் அடுத்த கேள்வி எழுந்தது. ஆனால் சிம்புவின் வீட்டில் முதலில் தம்பி குறளரசனுக்குத் தற்போது திருமணம் நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு டி ராஜேந்திரர் கண்கலங்கி கடவுள் இந்த கேள்வியை எதிர் கொள்ள வைத்து விட்டார் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்

 கால்ஷீட் பிரச்சனை,  சூட்டிங் சரியாக வருவதில்லை, உடல் பருனாகிவிட்டார் என பல சர்ச்சைகளில் இருந்துவந்த சிம்பு  திடீரென்று ஸ்லிம்மாகி தம்பியின் கல்யாணத்தில் கலந்து கொண்டு அனைவருக்குமே ஆச்சரிய அதிர்ச்சி கொடுத்தார். பத்து வருடங்களுக்கு முன்னால் சிம்பு எப்படி இருந்தாரோ அப்படி திரும்பி வந்திருக்கிறார், இனி படங்களில் முழு ஈடுபாடு காட்டுவார் என்று இருந்த நிலையில் நேற்று வெளியானது அந்த செய்தி. அது சிம்புவின் அம்மாவின் உறவுக்கார பெண்ணை சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதுவும் விஷாலின் திருமணத்திற்கு முன்பே நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தியோடு சிலருடன் சிம்பு எடுத்த செல்பியும் சமூகவலைத்தளங்களில் பரவியது. அதுவும் அவரது அடுத்த பட குழுஎன்ற தலைப்போடு இந்தப் படங்கள் வெளியாகின.  அதற்கும் திருமணம் குறித்த செய்திக்கும் சேர்த்து நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை பத்திரிக்கையாளர்களுக்கு தனியாக சிம்பு அனுப்பி வைத்திருக்கிறார்.

 

சிம்பு அறிக்கை

அதில், ‘’நான் குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தைத் தொடங்கியதிலிருந்தே எனக்கு பத்திரிக்கையாளர்கள் உறுதுணையாக இருந்துள்ளீர்கள். என்னை மகனாகவும் சகோதரராகவும் உங்களது வீட்டில் நினைத்து வருகிறீர்கள். நீங்கள் தான் எனக்கு மிகப்பெரிய தூண். நீங்கள் அளிக்கும் நல்ல விமர்சனங்களையும் எனது திறமையை மேம்படுத்தவே என்று நான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு நடிகனாக சாதாரணமாக ஒரு தயாரிப்பாளரையும் இயக்குனர்களையும் பார்க்க சென்றாலே அவருடன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துவிடுகிறது. இது எனது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும் என்பது முக்கியமான விஷயம். .நான் நடிக்கப்போகும் படங்கள் குறித்து அதிகாரபூர்வமாக அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அறிவிப்பு கண்டிப்பாக வரும். எனது தங்கையும் தம்பியும் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டனர், இதனைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவர்களின் திருமணத்திற்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எனக்கும் திருமணம் என்று சில வதந்திகள் வருகின்றது. தற்போது திருமணம் செய்து கொள்வது குறித்து எனக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. நான் திருமணம் செய்து கொள்ளும் போது சரியான தருணத்தில் சரியான முறையில் உங்களுக்கு தெரியப் படுத்துவேன். என்னைப்பற்றிப் பல வதந்திகள் பரவி வருவதால் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’’ என்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

NEXT STORY
உறவுக்காரப் பெண்ணுடன் திருமணமா? - சிம்பு விளக்கம் Description: நடிகர் சிம்புவுக்குத் திருமணம் என்று வெளியான செய்திகளுக்கு தற்போது திருமணம் செய்துகொள்ளம் திட்டம் இல்லை என சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles