நீண்ட கால பூசலுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இசை ஜாம்பவான்கள்!

சினிமா
Updated May 27, 2019 | 15:45 IST | Times Now

பாடல்கள், இசை பயன்பாடு குறித்த சர்ச்சையில் சில ஆண்டுகளாக இளையராஜா மற்றும் எஸ்பிபி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 

cinema, சினிமா
கட்டித்தழுவும் இளையராஜா, எஸ்பிபி  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள் சில பூசல்களுக்கு பிறகு இன்று ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவிய சம்பவம் ரசிகர்களை மகிழ வைத்துள்ளது.

இசையமைப்பாளர் இளையாராஜாவும், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும்தான் அந்த பிரபலங்கள். எஸ்பிபி இன்று இளையராஜாவை சென்னை, வடபழனி பிரசாத் ஸ்டூடியோவில் சந்தித்தார். 

பாடல்கள், இசை பயன்பாடு குறித்த சர்ச்சையில் சில ஆண்டுகளாக இளையராஜா மற்றும் எஸ்பிபி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 

இந்நிலையில் இந்த சந்திப்பு  இன்று நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நெகிழ்ச்சியுடன் சந்தித்து பேசினார்கள்.  
வருகின்ற ஜூன் மாதம் தமிழ்நாடு மியூசிக் யூனியன் நடத்தும் இசை நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றிணைந்து பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY
நீண்ட கால பூசலுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இசை ஜாம்பவான்கள்! Description: பாடல்கள், இசை பயன்பாடு குறித்த சர்ச்சையில் சில ஆண்டுகளாக இளையராஜா மற்றும் எஸ்பிபி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles