விமான நிலையத்தில் திருடு போன பணம்,பாஸ்போர்ட்; ட்விட்டரில் சௌந்தர்யா ரஜினிகாந்த விளாசல்!

சினிமா
Updated Sep 06, 2019 | 12:52 IST | Zoom

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவரின் ஹேண்ட் லக்கேஜ் லண்டன் விமான நிலையத்தில் திருடு போனது.

விமான நிலையத்தில் திருடு போன பணம்,பாஸ்போர்ட், Soundarya and Vishagan Hand Luggage Stolen
விமான நிலையத்தில் திருடு போன பணம்,பாஸ்போர்ட்  |  Photo Credit: Instagram

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவரின் ஹேண்ட் லக்கேஜ் லண்டன் விமான நிலையத்தில் திருடு போனது. 

ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகரும் தொழிலதிபருமான விஷாகனை திருமணம் செய்து கொண்டார். விஷாகன் அவ்வப்போது தொழில் ரீதியாக வெளிநாட்டிற்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் கணவர் விஷாகனுடன் சௌந்தர்யா எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டனுக்கு சென்றுள்ளார். அப்போது லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையில் அவர்களது ஹேண்ட் லக்கேஜ் திருடு போனது. அதில் விஷாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணமும் இருந்தது. உடனே அவர்கள் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

பின்னர் இந்த தகவல் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தை விசாரித்த காவலர்கள் விமான நிலையத்தில் அவர்கள் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் திருடு போனது பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில்  தங்களுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தை பதிவிட்டு விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு பற்றி விளாசி உள்ளார்.

 

 

மேலும் அவரின் அந்த பதிவில் அந்த சம்பவத்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தங்களுக்கோ மற்றவர்களுக்கோ இது போன்ற சம்பவம் நிகழ கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.     

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...