சூப்பர் மேனாக சிவகார்த்திகேயன்- வெளியானது ஹீரோ செகண்ட் லுக்!

சினிமா
Updated Oct 18, 2019 | 18:00 IST | Zoom

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி 'ஹீரோ' படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hero movie second look
ஹீரோ செகண்ட் லுக்  |  Photo Credit: Vogue

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஹீரோ'. இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் அபய் தியோல், அர்ஜுன், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனும் யுவனும் இணையும் முதல் படம் இது. 

இப்படத்தின் படபிபிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ஆச்ஷன் திரில்லர் ஆக உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேசராக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி 'ஹீரோ' படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட படக்குழு இன்று செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் பிகிலும், கார்த்தி நடிக்கும் கைதியும் ரிலீஸ் ஆகின்றன. அதன்பிறகு தனுஷ் நடிக்கும் பட்டாசு இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் வெளியாகவிருக்கும் பெரிய திரைப்படமாக ஹீரோ இருக்கும். 

NEXT STORY