செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை'

சினிமா
Updated Sep 21, 2019 | 12:17 IST | Zoom

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு சென்சாரரில் எந்த கட்டும் இல்லாமல் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், அடுத்த வாரம் செப்டம்பர் 27-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது 'நம்ம வீட்டுப் பிள்ளை',Sivakarthikeyan's 'Namma Veetu Pillai' releasing on september 27th,
செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது 'நம்ம வீட்டுப் பிள்ளை'   |  Photo Credit: Twitter

சிவகார்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, நட்டி, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, வேல ராமமூர்த்தி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக 'எங்க அன்னன்', 'ஜிகிரி தோஸ்து' பாடல்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.   

அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட், குடும்ப உறவுகள், கிராமத்து பின்னணி என ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று முன்னதாக அறிவித்த நிலையில், தற்போது படத்தின் சென்சாரரில் எந்த கட்டும் இல்லாமல் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலோடு இப்படம் அடுத்த வாரம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 

 

 

 

 

நடிகர் சிவகார்த்திகேயனின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாததால் அவரின் ரசிகர்கள் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.              

NEXT STORY