'நம்ம வீட்டுப் பிள்ளை'யாக சிவகார்த்திகேயன்! - பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

சினிமா
Updated Aug 12, 2019 | 12:17 IST | Zoom

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Namma Veetu Pillai
நம்ம வீட்டுப் பிள்ளை  |  Photo Credit: Twitter

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணையும் படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, நட்டி, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

 

குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனு இம்மானுவேல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறைந்த நாட்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இப்படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.         
              

NEXT STORY
'நம்ம வீட்டுப் பிள்ளை'யாக சிவகார்த்திகேயன்! - பர்ஸ்ட் லுக் ரிலீஸானது Description: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...