வேலைக்காரன் படத்துக்காக நயன்தாராவை நினைத்து வருத்தப்பட்டேன் - மிஸ்டர் லோக்கல் ப்ரஸ்மீட்டில் சிவகார்த்திகேயன்

சினிமா
Updated May 14, 2019 | 15:52 IST | Zoom

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன் தாரா நடிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் 17-ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

Mr Local stills
Mr Local stills  |  Photo Credit: Twitter

சீம ராஜா படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் மிஸ்டர் லோக்கல். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே பட இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நயன் தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகிபாபு, தம்பி ராமையா, ஹரிஜா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.  நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் படம் பற்றி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

சிவகார்த்திகேயன் பேசுகையில் நீண்ட நாட்களாக ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அவர் அமைத்துக் கொடுத்த வாய்ப்புதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம். எனது கேரியரில் மிக முக்கியமான படமும் கூட. நான் அவருடைய முதல் படமான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ரஜினி டயலாக்கை டப்பிங் பேசியிருந்தேன். அதன்பிறகு நிறையமுறை படம் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தற்போதுதான் அந்த ஆசை எனக்கு நிறைவேறி இருக்கிறது என்றார்.

அதன்பிறகு நயன்தாராவைப் பற்றிக் கூறியவர், ’’இது நயன் தாராவுடன் எனக்கு இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் அவருக்கு  நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருந்தது. என்னிடமும் பல பேர் கேட்டனர். இந்தப் படத்தில் அந்தக் குறை தீர்ந்தது. இந்தப்படத்தில் வில்லனே கிடையாது, மிகவும் ஜாலியான திரைப்படம். நயந்தாரா போல இருக்கும் ஒருவரால்தான் படம்முழுக்கத் தாங்கிப்பிடிக்க முடியும் என்றார். மேலும் அவர் படம் என்று வந்துவிட்டால் மிகவும் ப்ரொஃபஷனல், அதனால் அவருடன் நடித்து மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது என்றார். இனி பல படங்கள் எனக்கு அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கும், அடுத்துடுத்து பல ப்ரஸ் மீட்டுகளில் உங்களை சந்திப்பேன்’’ என்றார். வரும் வெள்ளிக்கிழமை இந்தத் திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. 

NEXT STORY
வேலைக்காரன் படத்துக்காக நயன்தாராவை நினைத்து வருத்தப்பட்டேன் - மிஸ்டர் லோக்கல் ப்ரஸ்மீட்டில் சிவகார்த்திகேயன் Description: ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன் தாரா நடிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் 17-ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles