"சிந்துபாத்" படத்தின் 'நெஞ்ச உனக்காக' பாடல் வெளியானது

சினிமா
Updated Jun 07, 2019 | 20:34 IST | Zoom

விஜய் சேதுபதி நடிக்கும் "சிந்துபாத்" படத்தின் "நெஞ்ச உனக்காக" பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Nenja Unakaga Video Song
Nenja Unakaga Video Song  |  Photo Credit: Twitter

அருண்குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் சிந்துபாத். இவரது இயக்கத்தில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்திருந்தார். தற்போது 3-வது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

சிந்துபாத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இதுதவிர லிங்கா, விவேக் பிரசன்னா உள்பட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இப்படத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Sindhubaadh

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாடலான "நெஞ்ச உனக்காக நான் பதிக்கி வைச்சேன்" பாடல் வெளியாகியுள்ளது.

 

 

ஏற்கனவே " ராக்ஸ்டார் ராபர்" பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதுபோல இந்தப் பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிச்சரண் பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Sindhubaadh

பல்வேறு காரணங்களால் சிந்துபாத் ரிலீஸ் தேதி தள்ளிபோன நிலையில், தற்போது ஜூன் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. 

NEXT STORY