’ஷங்கர் 25’ - ஒரே இடத்தில் கூடிய தமிழ் சினிமாவின் ஆளுமைகள்!

சினிமா
Updated Apr 21, 2019 | 18:48 IST | Zoom

விழா நாயகனான ஷங்கருடன், மணிரத்னம், கெளதம் மேனன், ரஞ்சித், லிங்குசாமி, ராஜா, சசி, பாலாஜி சக்திவேல், பாண்டிராஜன், அட்லி, எழில் மற்றும் இன்னும் பிற இயக்குனர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தனர்.

tamil cinema, தமிழ் சினிமா
விழாவில் இயக்குனர் ஷங்கர்   |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் இணைந்து கொண்டாடிய பிரத்யேக சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை அவருடைய சினிமா தோழமைகளும், தமிழ் சினிமா உலகில் தற்போது கொடி நாட்டி வருகின்ற பிரபல இயக்குனர்களும் இணைந்து கொண்டாடியுள்ளனர். 

நேற்று (20/04/19) மாலை பிரத்யேகமாக நடைபெற்ற இச்சந்திப்பை தன்னுடைய இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார் இயக்குனர் மிஷ்கின்.  இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுகால சினிமா சாதனைகளைப் பற்றி பாராட்டும் விதமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Shankar 25

விழா நாயகனான ஷங்கருடன், மணிரத்னம், கெளதம் மேனன், ரஞ்சித், லிங்குசாமி, ராஜா, சசி, பாலாஜி சக்திவேல், பாண்டிராஜன், அட்லி, எழில் மற்றும் இன்னும் பிற இயக்குனர்கள் ஒரே இடத்தில் கூடி ஷங்கரின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை கவுரவித்தனர். 

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர்கள் அனைவரும், விழா நாயகன் ஷங்கர் நீங்கலாக நீல நிறத்தில் ’S25' என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த டிஷர்ட்டை அணிந்து இந்த விழாவை சிறப்பாக்கியது குறிப்பிடத்தக்கது. விழாவில் அவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக எடுத்துக் கொண்டுள்ள நண்பர்கள் குழாம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

NEXT STORY
’ஷங்கர் 25’ - ஒரே இடத்தில் கூடிய தமிழ் சினிமாவின் ஆளுமைகள்! Description: விழா நாயகனான ஷங்கருடன், மணிரத்னம், கெளதம் மேனன், ரஞ்சித், லிங்குசாமி, ராஜா, சசி, பாலாஜி சக்திவேல், பாண்டிராஜன், அட்லி, எழில் மற்றும் இன்னும் பிற இயக்குனர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தனர்.
Loading...
Loading...
Loading...