சூர்யாவின் என்.ஜி.கே படம் எப்படி? - ட்விட்டர் விமர்சனம்

சினிமா
Updated May 31, 2019 | 09:40 IST | டைம்ஸ் நவ் தமிழ்

அரசியல் கதைக்களம் கொண்ட இந்தப் படத்தை பற்றி சமூக வலைதளங்களில் முதல் ஷோவைப் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? 

NGK Twitter Review
என்.ஜி.கே விமர்சனம்  |  Photo Credit: Twitter


நீண்ட நாள் காத்திருக்குப்பின் சூர்யாவின் என்.ஜி.கே படம் இன்று ரிலீசானது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்தப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் சூர்யாவின் 36வது படமாகும். இடையே பல தடைகளால் தாமதமாகி இன்று உலகம் முழுவதும் ரிலீசானது. சூர்யா ரசிகர்கள் பல இடங்களில் கட்-அவுட்டுகள் வைத்து திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். அனைத்து இடங்களிலுமே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அரசியல் கதைக்களம் கொண்ட இந்தப் படத்தை பற்றி சமூக வலைதளங்களில் முதல் ஷோவைப் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்று படம் வெளியாவதையொட்டி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ''அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்'' என்று தெரிவித்துள்ளார். இந்தப்படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் படமான காப்பானும் சூர்யாவுக்கு வெளியாக இருக்கிறது. 

 

NEXT STORY