முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிகர் சந்தானம்;வெளியானது 'டிக்கிலோனா' படத்தின் டைட்டில் லுக்!

சினிமா
Updated Sep 05, 2019 | 22:23 IST | Zoom

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்திற்கு 'டிக்கிலோனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 'டிக்கிலோனா' படத்தின் டைட்டில் லுக்,  'Dikkiloona' Movie Title Look
'டிக்கிலோனா' படத்தின் டைட்டில் லுக்  |  Photo Credit: Twitter

நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் படத்திற்கு 'டிக்கிலோனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  

'ஏ1' படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்தபடியாக கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்ட்ரி இணைந்து தயாரிக்கிறது. முதல் முறையாக மூன்று வேடத்தில் சந்தானம் நடிக்கும் இப்படத்திற்கு 'டிக்கிலோனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

1993-ஆம் ஆண்டு வெளியான 'ஜென்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற கௌண்டமணி செந்தில் காமெடியில் வரும் டிக்கிலோனா விளையாட்டை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். நடிகர் விஷாலின் 'பட்டத்துயானை' படத்தில் சந்தானம் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக அவர் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார். மேலும்  'டிக்கிலோனா' படத்தின் டைட்டில் லுக்கை பார்க்கும் போது இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

காமெடி பாணியில் உருவாகவுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடங்குவது பற்றியும் படக்குழுவினர் பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
               

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...