பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் சாக்‌ஷி அகர்வால்

சினிமா
Updated Aug 11, 2019 | 13:12 IST | Zoom

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

sakshi agarwal
சாக்‌ஷி அகர்வால்  |  Photo Credit: Twitter

ஃபாத்திமா பாவு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸின் 50வது நாளில் சாக்‌ஷி வெளியேற்றப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு வாரமும் சாக்‌ஷியும் அபிராமியும் நாமினேஷனில் இருந்தாலும் அவருடன் மற்ற ஹவுஸ்மேட்ஸ் குறைவான வாக்குகள் பெற்றதால் இத்தனை வாரங்களாகத் தப்பித்துவந்தனர். இந்த முறை சரவணன், முதல்முறையாக லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட அதில் சரவணன் இந்த வாரத் தொடக்கத்திலேயே பெண்களைத் தவறாகப் பேசியதாக பிக்பாஸால் வெளியேற்றப்பட்டார். இதனால் மற்ற மூவரும் மட்டும்தான் நாமினேஷனில் இருந்தனர். லாஸ்லியாவுக்கு இதுதான் முதன்முறை என்பதாலும் அவருக்கு இலங்கை ஓட்டுகள் அதிகம் விழும் என்பதாலும் கண்டிப்பாக அவர் காப்பாற்றப்பட்டு விடுவார் என்று ரசிகர்கள் தீர்க்கமாக இருந்தனர்.

மேலும் அபிராமி முகேனிடம் அத்துமீறி நடப்பதால் அவரும் ஹேட்டர்ஸ் ஜாஸ்திதான். ஆனால் சாக்‌ஷிக்கோ கவின் ஆர்மி, லாஸ்லியா ஆர்மி மற்றும் எப்போது சண்டை மூட்டிவிடுவதால் பொதுவான ரசிகர்களே கூட வெறுத்து வருகின்றனர். சென்ற வாரமே அவர்தான் எவிக்டடு என்று செய்தி பரவியது. ஆனால் ரேஷ்மே சென்றுவிட்டார். தற்போது 17வது எண்ட்ரையாக கஸ்தூரியும் வந்துள்ளார். ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய வேளையில் தற்பொது இன்றைய தினம் சாக்‌ஷி எவிக்ட் செய்யப்பட்டுள்ளாதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நேற்றே இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் நேற்று என்ன நடந்தது என்று சமூக வலைதளத்தில் பரவிவருகிறது. அதன்படி முதலில் லாஸ்லியா காப்பாத்தப்பட, அடுத்ததாக அபிராமியும் காப்பாற்றப்பாடு சாக்‌ஷி வெளியேற்றப்பட்டதாக கமல் அறிவித்திருக்கிறார். சோகம் என்னவென்றால் அடுத்தவாரம் 

NEXT STORY
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் சாக்‌ஷி அகர்வால் Description: இந்த வாரம் பிக்பாஸில் இருந்து சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola