[வீடியோ] சாக்‌ஷி வந்ததும் கவின் முகத்தைப் பாக்கணுமே! - கூடவே அபிராமியும் மோகன் வைத்யாவும் வந்துருக்காக...

சினிமா
Updated Sep 03, 2019 | 14:49 IST | Zoom

சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி அகர்வால்
Sakshi Agarwal, Abirami, Mohan Vaidha enters Biggboss house again  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் தமிழ் சீசன் 3,  இன்று 72வது நாளைக் கடந்துள்ளது. இன்னும் 30 நாட்களே மீதம் இருக்கும் நிலையில், சென்ற சீசன்களைப் போல கட்டிப்பிடித்து உருளும் போட்டிகளோ விடிய விடிய நடைபெறும் டாஸ்குகளோ இன்னுமே தொடங்கவில்லை. ஏதோ வனிதா இருப்பதால் அவ்வபோது சண்டை வருகிறது. அவரும் இல்லை என்றால் கவின், லாஸ்லியா க்ளிப்பிங்குகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க வேண்டி இருக்கும்.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. சென்ற வார இறுதியில் கமல் ஹாசன் பங்குபெறும் நிகழ்ச்சியில் கமல் யாரெல்லாம் மீண்டும் வீட்டுக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருந்தார். அதற்கு பெரும்பாலானோர் மோகன் வைத்யாவையும், ஷெரின், வனிதா சாக்‌ஷியையும் லாஸ்லியா அபிராமியையும் கூறினர். அவர்கள் கேட்டது போலவே இன்றைய ப்ரோமோவில் அபிராமி, சாக்‌ஷி அகர்வால், மோகன் வைத்யா ஆகியோர் வீட்டுக்குள் வந்துள்ளனர். 

நேற்று வனிதாவும் கவினும் சண்டை போடும்போது, வனிதா, ‘’ உன்னால்தான் சாக்‌ஷி வீட்டை விட்டு வெளியேறினார், அவரை உள்ளே கொண்டுவந்து விட்டுவிட்டு நீ வெளியே போ’’ என்று கோவமாகக் கூறினார். இந்நிலையில் தற்போது சாக்‌ஷி உள்ளே வந்ததைப் பார்த்து கவின் மலைத்துப் போய் நிற்க்கிறார். பழைய ஹவுஸ்மேட்ஸ்கள் வீட்டுக்குள் வருவது இது புதிதில்லை. ஆட்கள் குறைந்ததும், கண்டண்ட்டும் இல்லாமல் போகும். அதனால் முதல் சீசனில் ஆரத்தி, ஜூலி, சக்தி ஆகியோர் விருந்தினர்களாக வந்தனர். 2வது சீசனில் நித்யா, வைஷ்ணவி, ரம்யா என்.எஸ்,கே, ஷாரிக் ஆகியோரும் உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது. 

கவின் சாக்‌ஷியைப் பற்றி வீட்டுக்குள் கூறியதற்கு சாக்‌ஷி சென்ற வாரத்தில் ஒரு மறுப்பு வீடியோ வெளியிட்டு அதில் கவினைத் திட்டி இருந்தார். இந்நிலையில் சாக்‌ஷியே உள்ளே சென்றிருப்பதால், கவினுக்கும் அவருக்கும் சண்டை வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பார்ப்போம் இவர்கள் எத்தனை நாட்களுக்கு உள்ளே இருக்கப்போகிறார்கள், என்னெல்லாம் நடக்கப் போகிறதென்று! 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...