300 கோடி ரூபாய் செலவு: ஹாலிவுட் தரம்! - வெளியானது சாஹோ படத்தின் ட்ரைலர்

சினிமா
Updated Aug 11, 2019 | 14:46 IST | Zoom

பிரபாஸின் சாஹோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

saaho trailer
saaho trailer  |  Photo Credit: Twitter

பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு பிரபாஸின் அடுத்தப் படம் சாஹோ. பெரும் பொருட்செலவில் ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று ரிலீஸ் ஆனது. 

ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷங்கர்-இசான் லாய் இசையமைத்திருக்கிறார். சுஜீத் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் இந்தப் படத்துக்காக செலவிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ், ஷ்ரதா கபூர் தவிர ஜாக்கி ஷெராப், மந்திரா பேடி, அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது.  பாகுபலி படத்துக்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து பிரபாஸின் படம் வெளிவருவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பத்திஉள்ளது. மேலும் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்படுள்ளதாலும் இதன் அசரடிக்கும் ஸ்டண்ட் காட்சிகளாலும் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. தற்போது தமிழ் ட்ரைலர் யூ-டியூபில் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. 

NEXT STORY
300 கோடி ரூபாய் செலவு: ஹாலிவுட் தரம்! - வெளியானது சாஹோ படத்தின் ட்ரைலர் Description: பிரபாஸின் சாஹோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...