பிகில் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்கிய ரோபோ ஷங்கர்... காரணம் இது தான்!

சினிமா
Updated Oct 14, 2019 | 12:29 IST | Zoom

தங்களுடன் பணியாற்ற எனது மகளுக்கு வாய்ப்பு கொடுத்த அட்லீ சார் மற்றும் விஜய் சாருக்கு எனது நன்றிகள். ட்ரெய்லர் அற்புதமாக உள்ளது. - ரோபோ ஷங்கர்

Robo Shankar, Indraja Shankar, ரோபோ ஷங்கர், மகள் இந்திரஜா
ரோபோ ஷங்கர், மகள் இந்திரஜா | Photo Credit: Twitter/YouTube 

சென்னை: பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லரை கண்டதும் தாம் கண் கலங்கியதாக நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் கூறியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது வரை இந்த ட்ரெயலர் 2 கோடி முறைகளுக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிகில் ட்ரெய்லர் குறித்து நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார் ரோபோ ஷங்கர். பிகில் திரைப்படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா நடித்துள்ளது தான் இதற்கு காரணமாகும். கால்பந்து பயிற்சியாளராக நடிக்கும் விஜய்யிடம் பயிற்சி பெறும் வீராங்கனையாக இந்திரஜா நடிக்கிறார். மேலும், படத்தின் ட்ரெய்லரிலும் இந்திரஜா ஷங்கர் தோன்றும் வசனத்துடன் கூடிய முக்கிய காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

”எங்க அப்பாவும் குண்டு, எங்க அம்மாவும் குண்டு. பின்ன நான் எப்படி இருப்பேன்” என்று எதார்த்தமாகவும், அதே சமயம் உணர்ச்சி பொங்க இந்திரஜா பேசிய வசனம் ட்ரெய்லரில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பரவியுள்ளது. பலரும் அந்த காட்சியை பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ரோபோ ஷங்கர் ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டதாவது: ”பிகில் ட்ரெய்லரில் எனது மகளை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டன. தங்களுடன் பணியாற்ற எனது மகளுக்கு வாய்ப்பு கொடுத்த அட்லீ சார் மற்றும் விஜய் சாருக்கு எனது நன்றிகள். ட்ரெய்லர் அற்புதமாக உள்ளது.” இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் ரோபோ ஷங்கர் கூறினார்.

 

 

முன்னதாக, இயக்குனர் அட்லீயின் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் அவரை வாழ்த்திய ரோபோ ஷங்கர், பிகில் திரைப்படத்தில் நடிக்க தனது மகளுக்கு வாய்ப்பு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்தார்.

NEXT STORY