தெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, புரி ஜெகன்னாத் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு!

சினிமா
Updated May 14, 2019 | 16:26 IST | Times Now

தெலுங்கு நடிகர்கள் புரி ஜெகன்னாத், ரவி தேஜா உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு

ரவிதேஜா போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு
ரவிதேஜா போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு  |  Photo Credit: Instagram

தெலுங்கு நடிகர்கள் புரி ஜெகன்னாத், ரவி தேஜா உள்ளிட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பரபரப்பான வழக்கில், உரிய ஆதாரம் இல்லை என தெலங்கானா மாநில சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திராவில் தெலுங்கு நடிகர்கள் 62 பேருக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்ததாக சில இடைத் தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு இதில் தொடர்புடையதாக கருதப்பட்ட 12 தெலுங்கு திரைப் பிரபலங்கள் மீது சிறப்பு புலனாய்வுப் படையினர் குற்றச்சாட்டு பதிவு செய்தனர். 

தெலுங்கு திரையுல நட்சத்திரங்கள் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலா நட்சத்திரங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பாக தெலுங்கு திரைத்துறையைச் சேர்ந்த 62 பேரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின்போது அவர்களின் தலைமுடி, நகம் உள்ளிட்டவை பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருட்களுடன் பிடிபட்ட சிலர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பெறப்பட்டுள்ள தகவல் தெரிவிப்பதாக இந்தியா கிளிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புரி ஜெகன்னாத், ரவி தேஜா தவிர ஷியாம் கே நாயுடு, சுப்பராஜூ, தருண், நவதீப், சின்னா, நடிகை சார்மி கவுர், மும்மைதா கான், ரவி தேஜாவின் கார் டிரைவர் ஸ்ரீனிவாஸ், இளம் நடிகர் டேனிஷ் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
 

NEXT STORY
தெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, புரி ஜெகன்னாத் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு! Description: தெலுங்கு நடிகர்கள் புரி ஜெகன்னாத், ரவி தேஜா உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிப்பு
Loading...
Loading...
Loading...