இன்று மாலை வெளியாகிறது 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக்!

சினிமா
Updated Sep 11, 2019 | 15:36 IST | Zoom

சூப்பர் ஸ்டார் ரஜிகாந்தின் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளது.

'தர்பார்' செகண்ட் லுக் அப்டேட், 'Darbar' second look update
'தர்பார்' செகண்ட் லுக் அப்டேட்  |  Photo Credit: Twitter

சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினியின் '2.0' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி 'தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதன் பின்னர் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புடைபடங்கள் அவ்வப்போது லீக் ஆனது. பின்னர் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக 2 புடைபடங்களையும் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லைக்கா நிறுவனம் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இன்று மாலை 6.00 மணிக்கு 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

 

 

ரஜினியின் 167-வது படமான 'தர்பார்' மும்பையை கதைக்களமாக கொண்டது. இறுதியாக 1992-ஆம் ஆண்டு வெளியான 'பாண்டியன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.                    

  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...