இமயமலைக்கு தனது பயணத்தைத் தொடங்கினார் ரஜினிகாந்த்!

சினிமா
Updated Oct 13, 2019 | 11:36 IST | Zoom

இன்று காலை 6:40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து உத்தரகாண்ட், டெஹராடூனுக்கு சென்றுள்ளார்.

ரஜினிகாந்த ஆன்மீகப் பயணம்
ரஜினிகாந்த ஆன்மீகப் பயணம்  |  Photo Credit: Twitter

இன்று அதிகாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆன்மீக சுற்றுலாவைத் துவங்கியுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் பட ஷூட்டிங்கில் ரஜினி சம்பந்தப்பட்ட படபிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் மும்பையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் ஓய்வில் இருந்தார். தனது வீட்டில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து நண்பர்களை வரவேற்று மகிழ்ந்தார். சற்று ஓய்வில் இருந்தவர் அடுத்த படம்தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. 

மேலும் ரஜினிகாந்தின் அடுத்தபடத்தை எடுக்கவிருப்பது சிறுத்தை சிவா என்றும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அந்த செய்தியியை உண்மையாக்கி இருக்கிறது சன் டிவியின் ட்வீட். இதனால் சூப்பர்ஸ்டாரை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பது சிறுத்தை சிவா என்று உறுதியானது.

எப்போதும் ஒரு படம் நிறைவடைந்தவுடன் ரஜினிகாந்த் இமயமலைக்குச் செல்வது வழக்கம். மேலும் தனது அடுத்தப் படத்தின் படபிடிப்பும் தொடங்க இருப்பதால், அதற்குள் ஒரு ஆன்மீக சுற்றுலா சென்று வந்துவிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி 10 நாள் பயணமாக ரஜினிகாந்த் இன்று காலை 6:40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து உத்தரகாண்ட், டெஹராடூனுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கார் மூலமாக கேதார்நாத், பத்ரிநாத், அவர் எப்போதும் செல்லும் பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது. பயணம் முடிந்து ரஜினிகாந்த் வந்தவுடன் தலைவர் 168 படத்தின் பூஜை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  


 

NEXT STORY