சூர்யாவுக்கு என் ஆதரவு உண்டு: கல்விக் கொள்கை குறித்து ரஜினிகாந்த்!

சினிமா
Updated Jul 22, 2019 | 09:21 IST | Zoom

சூர்யாவின் கருத்துக்களை ஆதரிப்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinikanth speech in Kaappaan audio launch
Rajinikanth speech in Kaappaan audio launch  |  Photo Credit: Twitter

நேற்று நடைபெற்ற காப்பான் இசைவெளியீட்டு விழாவில் சூர்யாவின் கல்விக் கொள்கைக் கருத்துக்களை ஆதரிப்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா சமீபத்தில் கல்விக்கொள்கையை பற்றி விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், சீமான், பா.ரஞ்சித், வைகோ போன்றவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பா.ஜ.கவினர் அவர் தெரிவித்த விமர்சனங்களை ஏற்க மறுத்தனர். குறிப்பாக தமிழிசை, ஹச்.ராஜா போன்றோர் நேரடியாகவே சூர்யாவை விமர்சனம் செய்தனர். அரசியலில் உள்ள கமல்ஹாசனே சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்க, ரஜினிகாந்த் இதுபற்றி ஏதும் கருத்து தெரிவிக்கமல் இருந்தார்.

இந்நிலையில்தான் சூர்யா நடிப்பில் தயாரானா காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் என்று செய்திகள் வந்தன. ரஜினி தான் அரசியலுக்கு வருவதை அறிவித்த நிலையில் அவர் மோடிக்கு ஆதரவாகதான் பல முறை பேசியிருக்கிறார். இதனால்  இந்த விழாவில் அவர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்தது. மேலும் சங்கரிடம் இதுபற்றி சமீபத்தில் கேட்டதற்கு எனக்கு சூர்யா பேசியதே தெரியாது, அதனால் அதுபற்றி கருத்து கூற இயலாது என்று மழுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்தது போலவே நேற்று காப்பான் இசை வெளியீட்டு விழாவில் மேடையேறிய ரஜினி தனது படமான தர்பார் படம் பற்றி பேசத் தொடங்கினார். ''ஏ.ஆர்.முருகதாஸ், இதுவரை இப்படி ஒரு ரஜினிபடம் வந்திருக்கக் கூடாது என்று வேலைபார்த்து வருகிறார். அப்படி தயாராகிக் கொண்டிருக்கிறது தர்பார்.  தமிழாற்றுப்படை புத்தகத்தை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகாமானது. நானும் கே.வி.ஆனந்துடன் படம் செய்திருக்கவேண்டும், ஆனால் நான் அதைத் தவறவிட்டு விட்டேன். 

 ரஜினி கல்விக் கொள்கை குறித்துப் பேசினால்தான் மோடிக்குக் கேட்கும் என்றார்கள். ஆனால் சூர்யா பேசியே மோடிக்குக் கேட்டுள்ளது. கல்விக் கொள்கைப் பற்றி சூர்யா கூறிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன், அதற்கு ஆதரவும் தருகிறேன். அவரின் இன்னொரு முகம் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர், அவர் மாணவர்களுக்குப் பல உதவிகளை செய்தும் வருகிறார். அவர் கல்விக் கொள்கை குறித்துக் கூறியது அவர் மனதில் கொதித்துக் கொண்டிருந்த நெருப்பு, அந்த நெருப்பை உங்கள் மனதுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், காலம் தீர்மானிக்கட்டும்.’’ என்று கூறினார். 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...