கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தா் அவர்களின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த சிலையை நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமாா், நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர். அறிமுகமான முதல் வருடமே நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார் ரஜினிகாந்த். எங்களது ரசிகர்கள் சண்டையிட்டாலும் நானும், ரஜினியும் நெருக்கமானவர்கள். மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என நானும் ரஜினியும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதனால் தான் தங்களை பற்றி மற்றவர்கள் பேசும் பேச்சுகளுக்கு வழி இல்லாமல் போனது. ரஜினிக்கு 43 ஆண்டுகள் தாமதமாக விருது அறிவித்திருக்கிறார்கள். தாமதமாக கௌரவித்தாலும், தக்க மனிதரை தான் மத்திய அரசு கௌரவித்திருக்கிறது. திரையுலகை விட்டு விலகிவிடுவதாக கூறிய ரஜினியை கடிந்துகொண்டேன். நீங்கள் விலகினால் என்னையும் போகச் சொல்லி விடுவார்கள் என கிண்டலாக கூறினேன் என்றார்.