சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் !

சினிமா
Updated Jul 22, 2019 | 16:33 IST | Zoom

நடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Priya Bhavani Shankar in Vikram-58
விக்ரம்-58 படத்தில் பிரியா பவானி ஷங்கர்   |  Photo Credit: Instagram

நடிகர் விக்ரமின் 58-வது படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்றது. இதனை தொடர்ந்து  'டிமான்டி காலனி', 'இமைக்க நொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். செவன் ஸ்கிரீன் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நடிகர் விக்ரமின் 58-வது படமான இது அடுத்து ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.       

இதற்கு முன்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக 'மான்ஸ்டர்' படத்தில் நடித்த பிரியா பவானி ஷங்கர், தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் 'மாஃபியா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் 'இந்தியன்-2' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் உலா வருகிறது. 2017-ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். 

 


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...