என் மூன்று தேவதைகள் - குழந்தைகளின் படத்தை முதன்முறையாகப் பதிவிட்ட சின்னத்தம்பி பிரஜின் - சாண்ட்ரா

சினிமா
Updated Jun 11, 2019 | 13:15 IST | டைம்ஸ் நவ் தமிழ்

சின்னத்தம்பி சீரியல் பிரபலம் ப்ரஜின் தனது இரட்டைப் பெண் குழ்ந்தைகளின் படத்தை மனைவி சாண்ட்ராவோடு முதல் முறையாகப் பகிர்ந்துள்ளார்.

Prajin - Sandra Amy
Prajin - Sandra Amy  |  Photo Credit: Instagram

சின்னத் திரையின் க்யூட் ஜோடிகளில் ப்ரஜின் சாண்ட்ரா ஜோடியும் ஒன்று. விஜய் டிவி காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் பிரபலமான பிரஜினுக்கு அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தாங்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள காத்திருந்தோம் என்று சமீபத்தில் சாண்ட்ரா உருக்கமாகப் பேட்டி அளித்திருந்தார். சாண்ட்ராவும்  சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்தவர். 

தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஹீரோவாக வலம் வரத் தொடங்கி விட்டார் ப்ரஜின். இதனால் தற்போதுதான் நாங்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம் என்று தெரிவித்திருந்த இந்த ஜோடி பத்து வருடங்களாகக் காத்திருந்ததற்குப் பலனாய் கடந்த ஏப்ரம் மாதம் இரட்டைப் பெண் குழந்தகள் பிறந்தனர். 

 

அப்போது குழந்தைகளின் கால்களை தங்களின் பெயர்கொண்ட மோதிரம் போட்டு தனது இன்ஸ்டாகிராமில் குழந்தைப் பிறந்த செய்தியைத் தெரிவித்திருந்தார் ப்ரஜின். தற்போது சமீபத்தில் சாண்ட்ராவின் பிறந்தநாளைக் கொண்டாடிய ப்ரஜின், முதல் முறையாக தனது குழந்தைகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டில் சொல்லி அடிக்கறதைதான் நான் கேள்விபட்டிருக்கிறேன். நீ சொல்லிட்டே அடிச்சியே மாஸ், லவ் யூ, ப்ரவுடு மாம், என் மூன்று தேவதைகள் என்று மனைவிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் இந்த சின்னத்தம்பி!

NEXT STORY
என் மூன்று தேவதைகள் - குழந்தைகளின் படத்தை முதன்முறையாகப் பதிவிட்ட சின்னத்தம்பி பிரஜின் - சாண்ட்ரா Description: சின்னத்தம்பி சீரியல் பிரபலம் ப்ரஜின் தனது இரட்டைப் பெண் குழ்ந்தைகளின் படத்தை மனைவி சாண்ட்ராவோடு முதல் முறையாகப் பகிர்ந்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles