கிச்சா சுதீப் நடித்துள்ள 'பயில்வான்' படம் எப்படி இருக்கு? - ட்விட்டர் விமர்சனம்!

சினிமா
Updated Sep 12, 2019 | 13:35 IST

கிச்சா சுதீப் நடித்துள்ள 'பயில்வான்' படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

'பயில்வான்' ட்விட்டர் விமர்சனம், 'Pailwaan' movie twitter reviews
'பயில்வான்' ட்விட்டர் விமர்சனம்  |  Photo Credit: Twitter

கிச்சா சுதீப் நடித்துள்ள 'பயில்வான்' படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் மல்யுத்த வீரராகவும் பாக்சராகவும் நடித்துள்ள படம் 'பயில்வான்'. இப்படத்தில் சுனில் ஷெட்டி, ஆகான்க்ஷா ஷர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.கிருஷ்ணா இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.

இந்நிலையில் இன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. 'பயில்வான்' படத்தை பார்த்தவர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தற்போது விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் 'பயில்வான்' படத்துக்கும் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களே கிடைத்துள்ளது. படத்தின் சண்டை காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் படத்தின் நீளமும், தேவையில்லாத சில காதல் காட்சிகளும் படத்தின் ஓட்டத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.                          

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...