காப்பான், ஒத்த செருப்பு... இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்!

சினிமா
Updated Sep 18, 2019 | 19:04 IST | Zoom

இந்த வாரம் வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ!

இந்த வார ரிலீஸ், Movies releasing this week
இந்த வார ரிலீஸ்  |  Photo Credit: Twitter

இந்த வாரம் தமிழில் சூர்யாவின் 'காப்பான்', பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' மற்றும் 'சூப்பர்டூப்பர்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இது தவிர ஆங்கிலத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் 'ராம்போ:லாஸ்ட் பிளட்' படமும் ஹிந்தியில் சோனம் கபூர், துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஸோயா ஃபாக்டர்' படமும் வெளியாகுகிறது.

காப்பான்:

இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களில் அதிக எதிரிபார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் 'காப்பான்'. 'அயன்', 'மாற்றான்' படங்களை தொடர்ந்து மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ளார் நடிகர் சூர்யா. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பூமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை மையப்படுத்தி படங்கள் அவ்வப்போது வரும் நிலையில், படங்களில் அதிகம் பேசப்படாத எஸ்.பி.ஜி (Special Protection Group) அதிகாரியாக சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். இந்திய பிரதமராக நடித்துள்ள மோகன் லாலுக்கு சூர்யா இப்படத்தில் காப்பாளனாக நடித்துள்ளார். 'காப்பான்' படத்தின் டீசர், ட்ரெய்லர்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், செப்டம்பர் 20-ஆம் தேதி இப்படம் வெளியாகுகிறது.  

 

                     

 

ஒத்த செருப்பு:

உலக சினிமாவிலேயே புதிய முயற்சியாக 'ஒத்த செருப்பு' படம் ஒரே கதாபாத்திரத்தை கொண்டு, முழு படமும் ஒரு சிறிய அறையில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன். இப்படத்திற்காக பல புதிய விளம்பர முயற்சிகளில் பார்த்திபன் ஈடுபட்டுவருகிறார். பல பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு நல்ல விமர்சனங்களை அளித்துவருகின்றனர். 'ஒத்த சேர்ப்பு' படத்தின் டீசர், ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இப்படம் இந்த வாரம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2014-ஆம் ஆண்டு சூர்யாவின் 'அஞ்சான்' படத்தோடு பார்த்திபனின் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' வெளியானதை தொடர்ந்து, தற்போது மீண்டும் 'காப்பான்' படத்தோடு 'ஒத்த செருப்பு' படம் ரிலீஸ் ஆகிறது. 

 

 

சூப்பர் டூப்பர்:

அறிமுக இயக்குனர் அருண் கார்திக் இயக்கியுள்ள 'சூப்பர் டூப்பர்' படத்தில் துருவா, இந்துஜா ரவிச்சந்திரன், ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் காமெடி, ஆக்ஷன் என ஜனரஞ்ஜகமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது.  

 

          

 

                         

NEXT STORY