1993-இல் அமராவதி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். எந்த ஒரு பின்னனியும் இல்லாமல் இன்று தமிழ்சினிமாவில் ஒரு சூப்பர்ஸ்டாராக தன்னுடைய கடின உழைப்பாலும் விட முயற்சியாலும் விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறார். அவருடைய இந்தப் புகழுக்கு அவருடைய சிம்ப்ளிசிட்டி, அனைவருக்கும் உதவும் குணம் என்றுப் பல காரணம்.
இன்று அஜித்க்கு 48-வது பிறந்தநாள். நேற்று முதலே ரசிகர்கள் ட்விட்டரில் அஜித் பிறந்தநாளை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்ள் மட்டுமல்லாமல் சக நடிகர் நடிகைகளும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
தனது ரசிகர்களை வைத்து தான் வளர்கிறேன் என்று குற்றச்சாட்டு வந்தபோது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர். எந்த ஒரு ஹீரோவும் இப்படி ஒரு துணிச்சலான செயலை செய்யமாட்டார்கள். ஆனால் அதன்பிறகுதான் அவருக்கு ரசிகர்களே அதிகமானார்கள். அவர்டன் பணியாற்றிய பெரிய நடிகர்கள் முதல் லைட் மேன் வேலை செய்யும் டெக்னீசியன் வரை சொல்லும் ஒரே வார்த்தை... தல போல வருமா சார்! என்பதுதான். சக மனிதர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவரைப்பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரைப் பற்றிக் கூறாத ஆட்கள் இல்லை.
ஹேப்பி பர்த்டே தல அஜித்!