கடைகுட்டி சிங்கம் கார்த்திக்கு ஹேப்பி பர்த்டே, அவரைப் பற்றி அட போடவைக்கும் விஷயங்கள்!

சினிமா
Updated May 25, 2019 | 11:57 IST | Zoom

சிறுத்தையிலும் போலீஸ் தான், தீரனிலும் போலீஸ்தான், ஆனால் இரண்டிலும் ஒரு இடத்தில்கூட ஒரே கார்த்தியைப் பார்க்க முடியாது!

actor karthi birthday
நடிகர் கார்த்தி  |  Photo Credit: Twitter

சிவக்குமாரின் கலைக்குடும்பத்தில் இருந்து வந்த மற்றுமொரு மகா நடிகன் கார்த்தி இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பா நடிகர் என்றாலும் அண்ணன் சூர்யாவும் தம்பி கார்த்திக்கும் இன்று வெற்றிபெற்ற நடிகர்களாக வளம் வருகிறார்கள் என்றால் அது முழுக்கமுழுக்க அவர்களின் திறமையும் விடாமுயற்சியும் தான் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்று பிறந்தநாள் கொண்டாடும் யதார்த்த கலைஞன் கார்த்தி பற்றிய சில ’அட’ போடவைக்கும் தகவல்கள் இங்கே...

 1. கார்த்தி சென்னையில் மெக்கானிக்கல்  எஞ்சினியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் எம்.எஸ் (இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங்) படித்தவர். 
 2. எஞ்சினியரிங் படித்தாலும் அவருக்கு என்னவோ இயக்குநர் ஆவதுதான் பிடித்திருக்கிறது. ஆதனால் அப்பாவுக்காக எம்.எஸ் படித்தவர், அங்கே பார்ட்-டைமாக கிராஃபிக் டிசைனர் வேலையும் செய்திருக்கிறார்!
 3. பின் எம்.எஸ் படிப்பை முடித்தவுடன் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் படித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து வந்தவர் போன இடம் மணிரத்னம்.
 4. தனது அண்ணன் சூர்யா நடித்த, மணிரத்னம் படமான ஆயுத எழுத்தில் பணியாற்றியவர் அந்த படத்தில் சின்ன கதாப்பாத்திரத்திலும் நடித்திருப்பார். அதுதான் அவருக்கு முதல் படம்!
 5. அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதில் தேர்ந்தெடுத்து நடித்ததுதான் அமீரின் பருத்திவீரன்.
 6. சுமார் இரண்டு வருடங்கள் அந்தப்படத்தில் கடினமாக உழைத்திருக்கிறார். உழைப்பு ஏற்றப் பலனாக அந்தப்படம் தமிழ்நாடு அரசின் விருது, விஜய் அவார்ஸ்,  ஃபிலிம் ஃபேர் விருது என அவருக்கு மூன்று விருதுகளைப் பெற்றுத்தந்தது.
 7. அதன்பிறகு 2010-ஆம் ஆண்டு கார்த்தியின் கரியரில் மிகவும் முக்கியமான வருடம். அந்த ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல அனைத்துமே ஹிட், வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் என்று மிரட்டியிருந்தார் மனுசன்!
 8. கொம்பன், கடைக்குட்டி சிங்கம் என்ற கிராமத்து கதைகள் என்றாலும் சரி, காற்று வெளியிடை போன்ற ஸ்டைலிஷ் லுக்கென்றாலும் சரி அனைத்து விதமான கதைகளிலும் தன்னைப் பொருத்திக் கொள்வதில் கார்த்தி செம ஸ்மார்ட். அதிலும் மெட்ராஸ் படத்தில் பக்கத்து வீட்டுப் பையனாகவே நம்மோடு வாழ்ந்திருப்பார்! 
 9. காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என்று கலக்குகிறார் என்றால் தீரன் போன்ற படங்களில் யாரும் எதிர்பார்க்காத கதாப்பாத்தித்தில் வந்து நிற்பார். சிறுத்தையிலும் போலீஸ் தான், தீரனிலும் போலீஸ்தான், ஆனால் இரண்டிலும் ஒரு இடத்தில்கூட ஒரே கார்த்தியைப் பார்க்க முடியாது!
 10. சினிமா தொழில் என்றாலும் சூர்யாவைப் போன்றே உதவி செய்வதிலும் குறைந்தவர் இல்லை.  அவரது 31வது பிறந்தநாளில் மக்கள் நல மன்றத்தைத் தொடங்கி பல உதவிகளைப் புரிந்துவருகிறார். 
 11. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆசிரமங்களுக்குச் சென்று அவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடத் தவறியதில்லை. மகத்தான நடிகனையும் தாண்டி மனித நேயம் மிக்க நடிகனாக வளம் வரும் கார்த்திக்கு ஹேப்பி ஹேப்பி பர்த்டே!

 

NEXT STORY
கடைகுட்டி சிங்கம் கார்த்திக்கு ஹேப்பி பர்த்டே, அவரைப் பற்றி அட போடவைக்கும் விஷயங்கள்! Description: சிறுத்தையிலும் போலீஸ் தான், தீரனிலும் போலீஸ்தான், ஆனால் இரண்டிலும் ஒரு இடத்தில்கூட ஒரே கார்த்தியைப் பார்க்க முடியாது!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles