'என்.ஜி.கே எமோஜி...ரசிகர்களுடன் ட்விட்டர் லைவ்’ - ஃபுல் ஸ்விங் ப்ரமோஷனில் நடிகர் சூர்யா!

சினிமா
Updated May 20, 2019 | 21:16 IST | Zoom

முதலாவதாக சூர்யா இடம்பெற்றிருக்கும் என்.ஜி.கே போஸ்டரை குட்டி எமோஜியாக மாற்றி ட்விட்டர் எமோஜியாக வெளியிட்டிருந்தனர். 

cinema, சினிமா
என்.ஜி.கேவில் நடிகர் சூர்யா  |  Photo Credit: Twitter

சென்னை: இயக்குனர் செல்வராகவன் - நடிகர் சூர்யா காம்போவில் ‘என்.ஜி.கே’ திரைப்படம் வருகின்ற மே 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று ரசிகர்களுக்கு இரண்டு சர்ப்ரைஸ்களை அளித்துள்ளது திரைப்படக்குழு. 

முதலாவதாக சூர்யா இடம்பெற்றிருக்கும் என்.ஜி.கே போஸ்டரை குட்டி எமோஜியாக மாற்றி ட்விட்டர் எமோஜியாக வெளியிட்டிருந்தனர். 

தொடர்ந்து மாலை 5 மணியளவில் நடிகர் சூர்யா, ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் லைவ்வில் வந்து பதிலளித்தார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், பதில்களும் இங்கே உங்களுக்காக.

’என்.ஜி.கே திரைப்படத்தில் எதற்காக நடிக்க ஒத்துக்கொண்டீர்கள்?’

``என்.ஜி.கே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ப்ராஜெக்ட். 2000ஆம் ஆண்டிலேயே செல்வராகவன் கூட வொர்க் பண்ணியிருக்க வேண்டியது. ஆனால், கிட்டதட்ட 18 வருடங்களுக்குப் பிறகு அவர்கூட சேர்ந்திருக்கிறேன். இரண்டு பேரும் சந்திக்கும்போது அவரிடம் மூன்று ஸ்க்ரிப்ட் இருந்தது. அப்போ ட்ரீம் வாரியர்ஸ் பிரபுவும் கூட இருந்தார். என்.ஜி.கே ஸ்கிரிப்ட் எடுத்துக்கலாம்னு நாங்க முடிவு செய்தப்போ ‘நந்த கோபாலன் குமரன்’ பற்றியேதான் செல்வராகவன் எப்போதும் பேசுவார். என்னுடைய சினிமா கெரியரில் இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்”

தொடர்ந்து கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, சூர்யாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்?’ என்று கேட்ட கேள்விக்கு, ‘ஹாய் மாப்ள...எனக்காக உங்க நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. நான் சொல்லும் பதில் நீங்களே ஏத்துக்கும்படிதான் இருக்கும். சிஎஸ்கேவில் மகேந்திர சிங் தோனியைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் எப்போதும் சி.எஸ்.கே ரசிகன்’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ‘ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?’ என்கிற கேள்விக்கு ‘கதை கேட்டிருக்கிறே. விரைவில் நானும், ஜோவும் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது. இருவரும் மீண்டும் திரையில் தோன்றுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது’ என்று பதிலளித்தார்.

NEXT STORY
'என்.ஜி.கே எமோஜி...ரசிகர்களுடன் ட்விட்டர் லைவ்’ - ஃபுல் ஸ்விங் ப்ரமோஷனில் நடிகர் சூர்யா! Description: முதலாவதாக சூர்யா இடம்பெற்றிருக்கும் என்.ஜி.கே போஸ்டரை குட்டி எமோஜியாக மாற்றி ட்விட்டர் எமோஜியாக வெளியிட்டிருந்தனர். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles