அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா
Updated Jul 15, 2019 | 19:21 IST | Times Now

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Nerkonda Paarvai
Nerkonda Paarvai   |  Photo Credit: Twitter

சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் அடுத்த மாதம் 8-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். 'சதுரங்க வேட்டை', ' தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், 'வானில் இருள்', ' இ.டி.எம் சாங்' பாடல்களின் லிரிக்கல் வீடியோக்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

 

 

இந்நிலையில் இந்தப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்திருந்தார். அது என்ன அறிவிப்பாக இருக்கும் என காலை முதல் அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதற்கு இன்ப பரிசாக "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தனது ட்விட்டரில் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

அஜித் படம் பற்றிய அறிவிப்பு என்றாலே அவரது ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருவது வழக்கம். அதேபோல் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியையும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
 

NEXT STORY
அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Description: அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola