விக்னேஷ்சிவன் குடும்பத்துடன் விஷு பண்டிகையைக் கொண்டாடிய நயன்தாரா, மேலும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் இங்கே!

சினிமா
Updated Apr 15, 2019 | 15:31 IST | டைம்ஸ் நவ் தமிழ்

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் குடும்பத்தோடு விஷு பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்.

vignesh shivn, nayanthara, vishu
விக்னேஷ் சிவன், நயன்தாரா விஷூ கொண்டாட்டம்  |  Photo Credit: Instagram

சித்திரை முதல் நாளை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அது போலவே இன்று கேரள மக்கள் விஷு பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நடிகை நயன்தாராவும் தனது காதலர் விக்னேஷ் சிவனின் குடும்பத்தோடு விஷு பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் அவரின் அம்மா, சகோதரி மற்றும் அவரது கணருடன் நயன் தாராவும் இருக்கிறார். 

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். தற்போது லைக்கா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன் தாராவும் சிவகார்த்திகேயனும் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே- 1 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அது தவிர விஜய்யுடன் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். நயன் தாராவைப்போலவே பல மலையாள நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களுடைய விஷு பண்டிகை வாழ்த்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

സ്നേഹം നിറഞ്ഞ വിഷു ദിന ആശംസകൾ ❤️

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy vishu

A post shared by anupamaparameswaran (@anupamaparameswaran96) on

NEXT STORY
விக்னேஷ்சிவன் குடும்பத்துடன் விஷு பண்டிகையைக் கொண்டாடிய நயன்தாரா, மேலும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் இங்கே! Description: நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் குடும்பத்தோடு விஷு பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்.
Loading...
Loading...
Loading...