காதலர் விக்னேஷ் சிவனுடன் கனவு நகரத்தில் நயன் தாரா!

சினிமா
Updated Jun 11, 2019 | 08:35 IST | Zoom

உலகின் புகழ்பெற்ற ஹனிமூன் நகரமான கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்றுள்ளார் நயன் தாரா.

Nayanthara
Nayanthara   |  Photo Credit: Instagram

நயன் தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சுற்றுலா சென்றிக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

2015-ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோதுதான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன் தாராவுக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு சென்னையில் பிரபல அப்பார்ட்மெண்டில் இருவரும் லிவ்லிங் டுகெதராக வாழ்ந்துவருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டார் எப்பவுமே பிஸிதான். இருப்பினும் கேப் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலருடன் ட்ரிப் சென்று விடுவார் நயன். சென்ற வருடம் பொற்கோவில் சென்று வந்த படங்களெல்லாம் அப்போது வைரல் ஆனது. நயன் தாரா சமூக வலைதளங்களில் இல்லை என்றாலும் விக்னேஷ் சிவன் அவ்வபோது இருவரும் வெளியே செல்லும்போது எடுக்கும் படங்களைப் போட்டு நயன் ரசிகர்களின் சாபத்தைப் பெற்றுக்கொள்வார். 

தற்போது விஜய்யுடன் தளபதி 63, சூப்பர்ஸ்டாருடன் தர்பார், தெலுங்கில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்று பெரிய ஸ்டர்களின் முன்னணி படங்களில் நடித்து வருகிறார் நயன். இவைத் தவிர பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த கொலையுதிர்காலமும் மலையாளப் படமான லவ் ஆக்‌ஷன் ட்ராமவும் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Flying towards #santorini @cavotagoosantorini ?????? #santorini #dreamdestination #vacayMode

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on

இந்நிலையில் உலகின் புகழ்பெற்ற ஹனிமூன் நகரமான கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்றுள்ளார் நயன். உலகின் டாப் 10 இடங்கள் என்றால் அதில் இந்த தீவும் இடம்பெறும். பலருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது சென்று விட வேண்டும் என்று தோன்றும் இடம் அது, அப்படி இருக்க விக்னேஷ் சிவனுக்கும் இருக்காதா என்ன, அவரும் தனது கனவு இடத்துக்கு செல்கிறோம் என்று விவரித்துள்ளார்!

NEXT STORY