விரைவில் ‘நேஷனல் அவார்ட்’ அறிவிப்பு - தமிழில் எந்தெந்த படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்பு?

சினிமா
Updated Apr 22, 2019 | 22:56 IST | Zoom

மிகப்பெரிய அங்கீகாரமாக கருத்தப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 66வது முறைக்கான விருதுப்பட்டியல் இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

cinema, சினிமா
தேசிய திரைப்பட விருதுகள்  |  Photo Credit: Twitter

டெல்லி: இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சினிமா துறைக்காக வழங்கப்படும் பெருமை மிகுந்த விருதான மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருது எல்லா சினிமாத்துறையினருக்கும் ஒரு பெருங்கனவு. 

மிகப்பெரிய அங்கீகாரமாக கருத்தப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 66வது முறைக்கான விருதுப்பட்டியல் இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. விருது வழங்கும் விழா வருகிற மே மாதம் 3ம் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ளது. எனவே, நாளை அல்லது நாளை மறுநாளுக்கும் இந்த விருதுகள் பட்டியல் அறிவிக்கப்படலாம்.

இந்தமுறை தமிழில் இருந்து 2.0, காலா, செக்கச்சிவந்த வானம், பரியேறும் பெருமாள், மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற திரைப்படங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை, விஜய் சேதுபதியின் 96, விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரைக்கும் விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

கடந்த வருடம் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மிகச்சிறந்த திரைப்படங்கள் வெளிவந்துள்ளதால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
விரைவில் ‘நேஷனல் அவார்ட்’ அறிவிப்பு - தமிழில் எந்தெந்த படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்பு? Description: மிகப்பெரிய அங்கீகாரமாக கருத்தப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 66வது முறைக்கான விருதுப்பட்டியல் இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Loading...
Loading...
Loading...