நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் - தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்!

சினிமா
Updated May 14, 2019 | 23:29 IST | Zoom

நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்த காரணத்தினால் ஆறு மாதத்திற்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

cinema, சினிமா
நடிகர் சங்க செயற்குழு கூட்டம்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சங்க தேர்தலை பொறுப்பேற்று நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திநகர் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் நாசர், விஷால் மற்றும் பலரும் பங்கேற்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இவர்களது பதவிக்காலம் 2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முடிவடைந்தது. ஆனால், நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்த காரணத்தினால் ஆறு மாதத்திற்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அந்த ஆறு மாத கால கெடு முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை மீண்டும் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதியரசர் பத்மநாபனிடம் நாளை நடிகர் சங்க அலுவலகம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் - தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்! Description: நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்த காரணத்தினால் ஆறு மாதத்திற்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
Loading...
Loading...
Loading...