நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: விஷாலின் மனு நிராகரிப்பு

சினிமா
Updated Jul 08, 2019 | 16:33 IST | Zoom

நீதிபதி, விஷாலின் கோரிக்கையை நிராகரித்ததோடு இந்த வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

vishal
விஷால்  |  Photo Credit: Twitter

சென்ற மாதம் 23ஆம் தேதி பல தடைகளையும் தாண்டி பரபரப்பான சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி வழங்கக் கோரிய விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த வருட நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர், விஷால் தலைமையில் பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக பல காலமாக இருந்து வந்த பலர் நீக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களை சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் பரிசீலித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 23ம் தேதியன்று நடக்கவிருந்த நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைப்பதாகவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தொடந்த வழக்கில் நீதிபதிகள் 23ம் தேதி தேர்தலை நடிகர் சங்கம் நடத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்தது. அதுவரை வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டு வழக்கைத் தள்ளி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்பிறகு ஜுன் மாதம் 23-ஆம் தேதி மயிலாப்பூரில் தேர்தல் நடத்தப்பட்டு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். ரஜினிகாந்துக்கு தபால் ஓட்டு தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை. தேர்தலுக்குப் பின் பதிவான வாக்குகள் அனைத்தும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் தள்ளிவைக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் விஷால் தரப்பில் இருந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். நீதிபதி, விஷாலின் கோரிக்கையை நிராகரித்ததோடு இந்த வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

NEXT STORY
நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: விஷாலின் மனு நிராகரிப்பு Description: நீதிபதி, விஷாலின் கோரிக்கையை நிராகரித்ததோடு இந்த வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles