நடிகர் சங்க தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சினிமா
Updated Jun 13, 2019 | 16:45 IST | Zoom

வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்த நடிகர் சங்கத் தரப்பு வழக்கறிஞர், 3,171 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

chennai city, சென்னை
மாதிரிப்படம்  |  Photo Credit: Twitter

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு வருகின்ற ஜூன் 23ம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஏழுமலை என்கிற உறுப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

பதவிக்காலம் முடிந்த செயற்குழு, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது. மேலும், சங்க நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்ட பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்பவை எல்லாம் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்த நடிகர் சங்கத் தரப்பு வழக்கறிஞர், 3,171 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறிய அவர் தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இந்தாண்டு 52 உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இதையடுத்து, மரணமடைந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்ய நடிகர் சங்கம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகின்ற 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

NEXT STORY
நடிகர் சங்க தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு! Description: வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்த நடிகர் சங்கத் தரப்பு வழக்கறிஞர், 3,171 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles