சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 168 ஆவது படத்திற்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளாா். இது ரஜினிக்கு 168 படம் ஆகும். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்துக்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இயக்குநா் சிறுத்தை சிவா தீவிரமாக இறங்கியுள்ளாா்.
இதற்கிடையில், ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்காக நடிகை ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் என பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் இதை உறுதிப்படுத்தவில்லை. முதன் முறையாக நடிகர் ரஜினியுடன் இணைந்து சூரி நடிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ரஜினி காந்தின் 168 ஆவது படத்திற்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா் என்ற அதிகாரப்பூர்வ தகவலை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "முதல் முறையாக ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பதில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளது.