3வது ஆளாக வெளியேறினார் மோகன் வைத்யா!

சினிமா
Updated Jul 21, 2019 | 23:14 IST | Zoom

மோகன் வைத்யா எல்லா பெண்களிடமும் வரம்பு மீறி கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று வயசுக்கு மீறிய செயல்களை செய்து வருவது ரசிகர்கள் இடையே மிகுந்த அருவருப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

Biggboss Tamil 3 Mohan Vaidhya
Biggboss Tamil 3 Mohan Vaidhya  |  Photo Credit: Twitter

பிக் பாஸ் சீசன் தொடங்கி சரியாக இன்றுடன் ஒரு மாதம் காலம் ஆகிறது. இதுவரை பாத்திமா பாபுவும் வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் எந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். 

 சென்ற வாரம்  மோகன் வெளியேற்றப்பட்டார்  என்று கமல் கூறிவிட்டு பிறகு அவர் காப்பாற்றப்பட்டதாக கூறினார். அதன் பிறகு ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்டு இறுதியாக வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.  வனிதா வெளியேறிய பிறகு  பிக் பாஸ் நன்றாக இல்லை என்று விமர்சனங்கள் எழத்தொடங்கின. அதுவும் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகிய மூவரின் பிரச்சினையே இந்த வாரம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் வனிதா இருந்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்பாமல் இல்லை.

 

 

எப்போதும் சனிக்கிழமையே யாரையாவது காப்பாற்றிவிடுவார் கமல். ஆனால் இந்த வாரம் கவின் பிரச்சினையே பெரிய பிரச்சினையாக இருந்ததால் நாமினேஷன் பற்றி எதுவும் பேசவேயில்லை. மேலும் மீராவுக்கு ஒரு குறும்படமும் போட்டுக் காட்டினார் கமல். இதில் மீரா மீது தவறு ஏதுமில்லை சாக்‌ஷி மீதுதான் தவறு என்று தெளிவாக தெரிந்தது. இதனால் எந்த வாரம் சாக்ஷி அதிகமாக நாம் இனி செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  சென்ற வாரம் சாக்ஷி கேப்டனாக இருந்த நிலையில் இந்த வாரக் கேப்டனாக போட்டியின் மூலம் வெற்றி பெற்று தேர்வாகி இருக்கிறார் ரேஷ்மா. 

 

 


 இது ஒரு பக்கம் என்றால் மோகன் வைத்யா எல்லா பெண்களிடமும் வரம்பு மீறி கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று வயசுக்கு மீறிய செயல்களை செய்து வருவது ரசிகர்கள் இடையே மிகுந்த அருவருப்பையும் கோபத்தையும் உண்டுபண்ணியது. இதனாலேயே மக்கள் ஓட்டுப்போடாமல் மோகன் வைத்யாவை வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வாரம் வேறு புதிய போட்டியாளர்கள் யாரும் வருவார்களா பிக் பாஸ் சூடு பிடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

 

 

NEXT STORY
3வது ஆளாக வெளியேறினார் மோகன் வைத்யா! Description: மோகன் வைத்யா எல்லா பெண்களிடமும் வரம்பு மீறி கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று வயசுக்கு மீறிய செயல்களை செய்து வருவது ரசிகர்கள் இடையே மிகுந்த அருவருப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola