’மீ டூ’விற்கு எதிராக உருவானது ‘மென் டூ’ - பொய்யான குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஆண்களைக் காப்பாற்றவாம்!

சினிமா
Updated May 14, 2019 | 15:19 IST | Zoom

பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழும் பாலியல் புகார்களை மீ டூ மூலமாக வெளிவிடுவது போல, ஆண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை புகார்களாக தெரிவிக்கும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

cinema, சினிமா
கரண் ஓபராய்  |  Photo Credit: Twitter

சென்னை: பெண்களுக்கு எதிரான கொடுமைகளைச் சாடும் வகையில், வெளிக்கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்ட ‘மீ டூ’ இயக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’மென் டூ’ என்கிற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழும் பாலியல் புகார்களை மீ டூ மூலமாக வெளிவிடுவது போல, ஆண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை புகார்களாக தெரிவிக்கும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

பாலிவுட் நடிகர் கரண் ஓபராயின் நண்பர்கள் இணைந்து இந்த மென் டூ இயக்கத்தை துவங்கியுள்ளனர்.

மீ டூ மூலமாக பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளி உலகில் சொல்லத் துவங்கியிருந்தாலும், இதைப் பயன்படுத்தி பல பெண்கள், ஆண்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆதரவாக மென் டூ என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களில் 51% பேர் பொய்யான பாலியல் புகார்களால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆண்களின் பெயரை இறுதிக்கட்ட தீர்ப்பு வரும்வரை வெளியிடக்கூடாது என்று இந்த மென் டூ இயக்கம் வலியுறுத்துகிறது. 

NEXT STORY
’மீ டூ’விற்கு எதிராக உருவானது ‘மென் டூ’ - பொய்யான குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஆண்களைக் காப்பாற்றவாம்! Description: பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழும் பாலியல் புகார்களை மீ டூ மூலமாக வெளிவிடுவது போல, ஆண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை புகார்களாக தெரிவிக்கும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles