'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தில் இருந்து பிக்பாஸ் மீரா மிதுன் நீக்கம்!

சினிமா
Updated Oct 10, 2019 | 19:52 IST | Zoom

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் இருந்து மீரா மிதுனின் காட்சிகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

'அக்னிச் சிறகுகள்' படத்திலிருந்து மீரா மிதுன் நீக்கம்,Meera Mitun blashes out for replacing her in 'Agni Siragugal'
'அக்னிச் சிறகுகள்' படத்திலிருந்து மீரா மிதுன் நீக்கம்  |  Photo Credit: Twitter

'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தை 'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், நாசர், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மீரா மிதுன் நடிக்கவிருந்தார். ஆனால், தற்போது அவருக்கு பதில் நடிகை அக்சரா ஹாசன் நடிக்கிறார். இது குறித்து மீரா மிதுன் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

 

 

 

இதே போல சில நாட்களுக்கு முன்பு 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் இருந்து அவரது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து அவர் இயக்குனரையும், தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக விளாசினார்.

 

 

 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். தன்னை பற்றி இழிவாக பேசிய ஜோ மைக்கேலை ஆளை வைத்து தூக்கி சொன்னது, பிக்பாஸ் பைனலுக்கு முன் முகேனுடன் அவர் இருந்த காட்சிகளை பரப்ப சொன்னது என அவர் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது படங்களில் இருந்து நீக்கப்படுவதால் படக்குழுவினரையும் கடுமையாக சாடி வருகிறார் மீரா மிதுன்.     
 

NEXT STORY