தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் - மே 14 கூடுகிறது!

சினிமா
Updated May 11, 2019 | 18:56 IST | Zoom

கடந்த 2015-2018ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 2015, 18ம் தேதி நடைபெற்று புதிய அணியாக நாசர் தலைமையிலான குழு பதவியேற்றது. 

cinema, சினிமா
நடிகர் சங்கம்  |  Photo Credit: Twitter

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், வருகின்ற மே 14ம் தேதியன்று அவசரமாக நடைபெற இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை, மே 14ம் தேதியன்று மாலை திநகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மாலை நேரம் இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட காரணத்தினால், தேர்தல் குறித்த நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கக்கவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் இந்த அவசர கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-2018ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 2015, 18ம் தேதி நடைபெற்று புதிய அணியாக நாசர் தலைமையிலான குழு பதவியேற்றது. 

நாசர், விஷால், கார்த்தி மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018ம் அக்டோபருடன் முடிவடைந்து விட்டதால் புதிய நிர்வாகிகளை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். 

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால் தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். 

தற்போது தேர்தலுக்கான 6 மாத காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் இந்த அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

NEXT STORY
தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் - மே 14 கூடுகிறது! Description: கடந்த 2015-2018ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 2015, 18ம் தேதி நடைபெற்று புதிய அணியாக நாசர் தலைமையிலான குழு பதவியேற்றது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola