மார்வெல்லின் அடுத்தடுத்த படங்கள் பற்றி அறிவிப்பு வெளியானது! - விவரம்

சினிமா
Updated Jul 22, 2019 | 12:11 IST | Zoom

மார்வெல் ஸ்டுடியோஸின் ஃபேஸ்-4இல் எந்தெந்த படங்கள் உருவாக்கப்பட உள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது!

Marvel Phase 4
மார்வெலின் அடுத்த படங்கள்   |  Photo Credit: Twitter

'அவெஞ்சர்ஸ் - எண்டுகேம்' படத்தை தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோஸ் தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மார்வெலின் மூன்றாம் கட்ட படங்கள் முடிவுக்கு வந்த நிலையில் அடுத்தபடியாக வெளியாகவுள்ள நான்காம் கட்ட படங்களை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சான் டிகோ காமிக் கான் -இல் மார்வெல் ஸ்டுடியோஸின் தலைவர் கெவின் ஃபிஜ் வெளியிட்டார். படங்கள் மட்டும் இன்றி டிஸ்னி பிளஸில் சீரிஸும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். அவற்றின் சிறிய தொகுப்பு இதோ ! 

பிளாக் விடோ:  Black Widow    

'ஐயர்ன் மேன்-2' படத்தில் அறிமுகமான பிளாக் விடோ என்ற கதாபாத்திரம், அதனை தொடர்ந்து  மார்வெலின் பல படங்களில் இடம்பெற்றது. மார்வெலின் பல சூப்பர் ஹீரோக்களுக்கு தனியாக படம் இருந்த நிலையில், பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு அது போன்று எதுவும் இதுவரை இல்லை. இந்நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தின் தனி படமான 'பிளாக் விடோ' அடுத்த ஆண்டு மே-1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முந்தைய படங்களில் பிளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன் இப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மார்வெலின் ஃபேஸ் 4-இல் முதலாவதாக வெளியாகவுள்ள இப்படத்தை கேட் ஷார்ட்லேண்ட் இயக்குகிரார்.

 

 

எடர்னல்ஸ்:   The Eternals movie     

மார்வெல் ஸ்டுடியோஸில் 'எடர்னல்ஸ்' படத்தின் மூலம் பல புது கதாபாத்திரங்கள் அறிமுகமாகவுள்ளது. சல்மா ஹய்க், ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மதேன் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 

 

 

ஷாங் ஷி அண்ட் தி லெஜெண்ட் ஆப் டென் ரிங்ஸ் : Shang-Chi and the Legend of the Ten Rings

மார்வெல் ஸ்டுடியோஸின் முதல் ஆசிய சூப்பர் ஹீரோ ஷாங் ஷி. சீனாவை பின்னணியாக கொண்ட இப்படத்தில் சிமு லுய், டோனி லுயிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கும் இப்படம் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

 

 

டாக்டர் ஸ்ட்ரேஞ் இன் தி மல்டிவர்ஸ் ஆப் மாட்னஸ் Doctor Strange in the Multiverse of Madness

2016-ஆம் ஆண்டு வெளியான 'டாக்டர் ஸ்ட்ரேஞ்' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகவுள்ளது. பெனடிக்ட் கும்பேர்பாட்ச், எலிஸபேத் ஓல்சன் நடிக்கும் இப்படத்தை ஸ்காட் டெரிக்சன் இயக்குகிறார். மார்வெலின் முதல் பேய் படமான இது 2021-ஆம் ஆண்டு மே மாதம் திரைக்கு வருகிறது.

 

 

தோர்- லவ் அண்ட் தண்டர் : Thor 4: Love and Thunder​

மார்வெலின் அடுத்தகட்ட படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'தோர்- லவ் அண்ட் தண்டர்'. முதல் முறையாக தோர் கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிக்கவுள்ளார். இப்படம் 2021-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

 

 

பிளேட் : Blade

மார்வெலில் புதிய கதாபாத்திரமான பிளேடில் மஹெர்ஷாலா அலி நடிக்கவுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

 

 

இது மட்டும் இன்றி 'தி ஃபால்கான் அண்ட் தி வின்டர் சோல்ஜர்', 'வாண்டாவிஷன்', 'லோகி', 'வாட் இப்', 'ஹாக் ஐ' ஆகியவை டிஸ்னி பிளஸில் வெப் சீரிஸாக வருகிறது.  

                       
       

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...