தொடங்கியது மணி ரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு !

சினிமா
Updated Jul 19, 2019 | 17:28 IST | Zoom

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் மணி ரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

'வானம் கொட்டட்டும்' திரைப்படம்
Vaanam Kottatum  |  Photo Credit: Twitter

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

'செக்க சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அடுத்தபடியாக தயாரிக்கும் படம்  'வானம் கொட்டட்டும்'. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை 'படைவீரன்' படத்தை இயக்கிய தனசேகரன் இயக்குகிறார். மேலும் மணி ரத்னம், இயக்குனர் தனசேகரனோடு சேர்ந்து இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனதோடு லைக்கா நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. 

'96', 'உறியடி-2' ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறு சில படங்களின் பணியில் பிஸியாக இருந்ததால் இப்படத்தை விட்டு விலகினார். அவர் வெளியேறியதை தொடர்ந்து பிரபல பாடகரான சிட் ஸ்ரீராம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இயக்குனர் மணி ரத்னம் 'செக்க சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து தற்போது 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், விரைவில் அப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...