பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

சினிமா
Updated Oct 17, 2019 | 15:01 IST | சு.கார்த்திகேயன்

பணம் பறிக்க, விளம்பரத்திற்காகவே பிகில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அட்லி தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்.

Actor VIjay
நடிகர் விஜய்  |  Photo Credit: Twitter

சென்னை: பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளாா். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என உரிமை கோருகிறார் உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்துள்ளாா். 

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் அட்லி மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தரப்பிற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணம் பறிக்க, விளம்பரத்திற்காகவே பிகில் படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அட்லி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டாா். அதற்கு, கே.பி. செல்வா தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தாா். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளாா். 
 

NEXT STORY