எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம்

சினிமா
Updated Jun 18, 2019 | 16:06 IST | Times Now

நடிகர் சங்க தேர்தலை சென்னை, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Nadigar Sangam election 2019
பாண்டவர் அணியினர்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் சங்க தேர்தலை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். எனவே நடிகர் சங்க தேர்தலை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகின்றன. 

இதற்காக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நாடக, நடிகர்களை சந்தித்து இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் தேர்தல் நாளன்று தகராறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி, பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Nadigar Sangam election 2019

அதில், தேர்தல் நடைபெற உள்ள இடம் அமைச்சர்கள் குடியிறுப்புகள், நீதிபதிகள் குடியிறுப்புகள், மருத்துவமனை உள்ள பகுதி என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Nadigar Sangam election 2019இதற்கிடையில் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியில் நடிகர் சங்க தேர்தலை நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது.

Nadigar Sangam election 2019இதையடுத்து அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலை இல்லை. நடிகர் சங்க தேர்தலை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம்.  எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி, நந்தனம் ஒய்எம்சிஏ போன்ற மாற்று இடங்களை கருத்தில் கொள்ளலாம் என மனுதாரருக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வெகு தொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என்ற கருத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
 

NEXT STORY
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம் Description: நடிகர் சங்க தேர்தலை சென்னை, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles