நயன்தாரா படத்தை ரிலீஸ் செய்ய திடீர் தடைவிதித்தது உயர்நீதிமன்றம்

சினிமா
Updated Jun 11, 2019 | 16:01 IST | Times Now

நயன்தாராவின் "கொலையுதிர் காலம்" படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Nayanthara's Kolaiyuthir Kaalam
Nayanthara's Kolaiyuthir Kaalam  |  Photo Credit: Twitter

சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஐரா படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்துள்ள படம் "கொலையுதிர் காலம்".  கமலின் உன்னைபோல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் "கொலையுதிர் காலம்" என்ற தலைப்பு என்னுடையது எனக் கூறி இயக்குநர் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த தலைப்பை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கி உரிமை பெற்றுள்ளதால் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, "கொலையுதிர் காலம்" என்ற பெயரில் நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், படத் தயாரிப்பு நிறுவனம் வரும் ஜூன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சிக்கல் ஒருபுறம் இருக்க, படத்தின் ஹூரோயின் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் உலகின் புகழ்பெற்ற ஹனிமூன் நகரமான கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 

NEXT STORY