17 வருடங்கள் கழித்து சிம்ரனுடன் நடிக்கிறேன் - மாதவன் நெகிழ்ச்சி!

சினிமா
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 15, 2019 | 17:49 IST

மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கன்னத்தில் முத்தமிட்டால் கதாபாத்திரமான திரு செல்வனை நினைவுகூர்ந்து திருவும் இந்திராவும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

Madhavan - Simran
Madhavan - Simran  |  Photo Credit: Twitter

மாதவன் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் . இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறைப் பற்றிய படம். இதில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நம்பி நாராயணனின் வயதான தோற்றத்தில் நடித்து முடித்த மாதவன் தற்போது அவரது இளமை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் ஃபர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்து படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார். அவர் நம்பி நாராயணனின் மனைவியாக நடிக்கிறார் இதற்கு முன் சிம்ரனும் மாதவனும் 2002-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் கணவன் மனைவியாக நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாதவன் இந்திரா என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளராக நடித்திருப்பார். சிம்ரன் அவரது பக்கத்து வீட்டு பெண்ணாக மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார். இருவரது கெமிஸ்ட்ரியும் அப்போது மிகவும் பரவலாக பேசப்பட்டது. அந்தப் படத்துக்குப் முன்னால் 2001 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் பார்த்தாலே பரவசம் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

After 14 hrs on the chair.. Who is who is WHO???????? #rocketryfilm @tricolourfilm @media.raindrop @vijaymoolan

A post shared by R. Madhavan (@actormaddy) on

 

 இதனை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கன்னத்தில் முத்தமிட்டால் கதாபாத்திரமான திரு செல்வனை நினைவுகூர்ந்து திருவும் இந்திராவும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

NEXT STORY
17 வருடங்கள் கழித்து சிம்ரனுடன் நடிக்கிறேன் - மாதவன் நெகிழ்ச்சி! Description: மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கன்னத்தில் முத்தமிட்டால் கதாபாத்திரமான திரு செல்வனை நினைவுகூர்ந்து திருவும் இந்திராவும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola