மோகன்லால் இயக்கும் படத்தில் இசையமைப்பாளர் ஆனார் 14 வயது லிடியன்!

சினிமா
Updated Jun 17, 2019 | 12:50 IST | Zoom

இவர் கடந்த மார்ச் மாதம் சர்வதேச அளவில்  நடைபெற்ற வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் தனது இசைத் திறமையால் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாக வென்றவர் லிடியன்!

Mohanlal - Lydian Nadhaswaram
Mohanlal - Lydian Nadhaswaram  |  Photo Credit: Twitter

உலக அளவில் பிரபலமான பியானிஸ் லிடியன் நாதஸ்வரம் மலையாளப் படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் பயின்றவர் லிடியன் நாதஸ்வரம். இவர் கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியில் சர்வதேச அளவில்  நடைபெற்ற வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் தனது இசைத் திறமையால் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த விழாவில் வெற்றி பெற்றதற்காக லிடியனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது. 

தனது மாணவர் என்பதால் லிடியனுக்கு சென்னையில் அப்போது பாராட்டு விழாவும் நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது  லிடியன் என்னுடன் இணைந்து பணியாற்றுவதை விட இன்னும் பல உயரங்களைத் தொடவேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்திருந்தார். தற்போது அந்த விருப்பம் நிறைவேறப்போகிறது. ஆம், 14 வயதான் லிடியன் மலையாளப் படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதாகச் செய்திகள் வெளியாகிவருகிறது.

குழந்தைகள் படமான பரோஸ் என்ற படத்துக்கு அவர் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு யார் கதை தெரியுமா? மை டியர் குட்டிச்சாத்தான் படம் மூலம் 3டி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஜிஜோ புண்ணூஸ்தான். மேலும் மோகன்லால் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தின் படபிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது. இந்தப் படம் வாஸ்கோட காமாவைப் பற்றி இருப்பதால், இதன் படபிடிப்பு கோவா, போர்ச்சுகல் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 

NEXT STORY
மோகன்லால் இயக்கும் படத்தில் இசையமைப்பாளர் ஆனார் 14 வயது லிடியன்! Description: இவர் கடந்த மார்ச் மாதம் சர்வதேச அளவில்  நடைபெற்ற வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் தனது இசைத் திறமையால் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாக வென்றவர் லிடியன்!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles